செய்திகள்

அரசு ஊழியர்கள் அனைவரும் வழமைபோன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவு…

அரசு ஊழியர்கள் அனைவரும் வழமைபோன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர். 
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் வழமைபோன்று அனைத்து அரச சேவையாளர்களும் தத்தமது அலுவலகங்களுக்கு கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
அத்துடன் கொவிட் 19 கொரோணா தொற்று பரவல் நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை கொண்டு அத்தியாவசியமான அரச பணிகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றறிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button