செய்திகள்
அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலைகள் இரு வாரங்களுக்கு ஒன்லைனில் இயங்கும்!

பாடசாலைகள் கற்றல் கற்பித்தல் மற்றும் அரச அலுவலக பணிகளை 2 வாரங்களுக்கு ஒன்லைன் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளதாகவும், இதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளிவரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே நேரம் பாடசாலைகளுக்கு அதிக விடுமுறை வழங்கப்பட்டு வருவதால் எதிர் வரும் ஆகஸ்ட் ,டிசம்பர் மாதங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காமல் அந்தகாலப்பகுதியில் கற்பித்தலை மேற்கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.