செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

பாதீடு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மற்றும் மாகாண அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கண்டி அலவத்துகொடவில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் பொதுச் செயலாளர் அஜித் கே.திலகரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்துக்கான பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மேலதிக கொடுப்பனவு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனவே, அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button