கல்விசெய்திகள்

அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மே 6 வரை விடுமுறை.

தேசிய பாதுகாப்பு கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இன்று கூடிய பாதுகாப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரும் திங்கட்கிழமை 29 ஆம் திகதி மீள திறப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்திருந்த போதும், தொடர்ந்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com