செய்திகள்

அரிசியின் அசாதாரண விலை உயர்வை தடுக்க நடவடிக்கை!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்குத் தேவையான நிதியை இந்தியக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வணிக கூட்டுத்தாபனத்துக்கு ஒதுக்குவது என நேற்று (17) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் ஏற்படும் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், அரிசி விலையில் ஏற்படும் அசாதாரண உயர்வைக் கட்டுப்படுத்தவும் இது உதவும் என நம்பப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலில் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச, தனியார் துறை அதிகாரிகள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button