செய்திகள்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு?

ஒரு கிலோ அரிசியை இலாபத்துடன சுமார் 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்னர் முன்வைக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமற்ற விலைச் சூத்திரம் காரணமாக நாட்டில் அரிசியின் விலை முற்றாக சிதைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பாரிய ஆலை உரிமையாளர்களின் தேவைகளுக்கு இணங்க செயற்படுவதனால் பெருமளவிலான சிறிய ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரிசிக்கான சில்லறை விலை நிர்ணயம் செய்யப்படாததன் காரணமாக சில்லறை விற்பனையாளர் அரிசியை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button