செய்திகள்

அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச நிர்ணய விலை!

அரிசி மற்றும் சீனிக்கு அதிகபட்ச நிர்ணய விலை அறிவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் சீனி மற்றும் அரிசிக்கு இவ்வாறு நிர்ணய விலை அறிவிக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனியின் விலையதிகரிப்பிற்கு சீனி இறக்குமதியாளர்கள் பல்வேறுவிதமான காரணங்களைக் கூறுகின்ற போதிலும், அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை.
அவர்கள் அதிகளவான இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே சீனிக்கு அதிக விலையை நிர்ணயித்திருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தில் வலுவான திருத்தங்களை மேற்கொண்டு, நிர்ணயவிலையை விடவும் அதிகவிலைக்கு அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூட்டுறவுச்சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி உயர்வு உள்ளடங்கலாக இறக்குமதியாளர்களால் கூறப்படும் சீனி விலையதிகரிப்பிற்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையாக இல்லை.

எத்தகைய காரணமாக இருப்பினும் ஒருகிலோகிராம் சீனியை 220 ரூபாவிற்கு விற்பனை செய்வதென்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.
எனவே சீனி இறக்குமதியாளர்கள் அதிகளவான இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு அதிக விலையை நிர்ணயித்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளமுடிகின்றது.

எனவே எமது அமைச்சுடன் வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவையும் இணைந்து நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைவாக இவ்வாறான மிதமிஞ்சிய விலையுயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

கடந்த காலத்தில் சீனியை விற்பனை செய்வதற்கான நிர்ணயவிலை அறிவிக்கப்பட்ட போதிலும், விற்பனையாளர்கள் அதனை முறையாகப் பின்பற்றவில்லை.

Related Articles

Back to top button


Thubinail image
Screen