செய்திகள்

அரியாலையில் கணவனை திருகுவளையால் அடித்து கொன்ற மனைவி.

அரியாலை பூம்புகாரில் நேற்று இரவு இளம்குடும்பஸ்தர் அடித்துக் கொல்லப்பட்டதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் மனைவியின் கள்ளக்காதலனும் இணைந்து மேற்கொண்ட கூட்டுக் கொலையென்பது தெரிய வந்துள்ளது.

29 வயதான காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை, பூம்புகாரில் நேற்று இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். போதையில் வந்த கணவர் தாக்கி துன்புறுத்தியதால், தான் திருகுவளையால் தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக, அவரது மனைவி தெரிவித்தார்.

இதையடுத்து, அது குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த மரணத்தில் சந்தேகமிருப்பதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற யாழ் நீதிவான் அது குறித்த விசாரணைகளிற்கு உத்தரவிட்டார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கொலையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பெண்ணிற்கு தவறாக காதல் உறவு இருப்பது தெரிய வந்தது. பூம்புகார் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞனுடன் அவர் தவறான உறவில் இருந்துள்ளார்.

பொலிசார் நடத்திய மேலதிக விசாரணையில், கொலையில் அந்த இளைஞனும் தொடர்புபட்டிருந்ததாக தகவல் கிடைத்தது.

நேற்று இரவு கணவர் வீட்டுக்கு வந்த போது, மனைவியும், கள்ளக்காதலனும் அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்தே, கணவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கள்ளக்காதலனே திருகுவளையால் தாக்கி, நிலத்தில் விழுத்தி, காலால் அவரது கழுத்தை அழுத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அவரை பொலிசார் தேடிய போது தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen