செய்திகள்

அருவக்காட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துக்கான அறிக்கை தயாரானது .

அருவக்காடு குப்பை கொட்டும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கை புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கும், வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அறிக்கை தொடர்பாக நீதிமன்றம் கவனம் செலுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வனாத்தவில்லு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக மெகா பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அரச இரசாயன பகுப்பாய்வாளர் அமைச்சு மட்டத்தில் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இது ஒரு தான்தோன்றித்தனமான செயற்பாடா என்பது குறித்து ஆராய தொடர்ந்தும் அமைச்சு மட்டத்தில் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி இரவு 8.30 அளவில் அலுவக்காடு குப்பை கொட்டும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கழிவு நீர் அகற்றும் தொட்டியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தால் அதன் மேற்பரப்பு முற்றாக அழிவடைந்தது.

இவ்வாறு தாங்கி உடைந்தமைக்கு கழிவுகளில் இருந்து வெளியேற்றிய மீதேன் வாயுவே காரணம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டாலும் அதனை நிராகரித்த மெகா பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மீத்தேன் வாயு ஒரு கொங்கிரீட் அடைப்பில் வெடிக்க வாய்ப்பில்லை என அறிக்கை ஒன்றின் மூலம் கூறியது.

எனினும் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் ஊடாக குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மெகா பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button