சினிமா

அருவி பாய்ந்தது

 

கடந்த வருடம் தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில் நல்ல ஆண்டாகவே அமைத்திருந்தது எனலாம். தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் மக்களை மகழ்ச்சி படுத்தியதோடு, அதிலும் சில படங்கள் மக்களின் மனங்களில் ஆளமாக இடம் பிடித்தது. அப்படித்தான் ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரம் தங்களோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை கொண்டதாக அமைய பெற்றதை உணர்ந்திருந்தார்கள். அப்படி இன்றளவும் பேசப்படுகின்ற திரைக்காவியமாக கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த அருவி இன்னுமே மக்கள் மனங்களில் ஓயாது பாய்ந்தவண்ணமே இருக்கின்றது .

மெர்சல் என்ற மாபெரும் மாஸ் திரைப்படம் பல சர்ச்சைகளோடு வெற்றிப் பெற்று ஓடி ஓய்வு நிலைக்கு வருகின்ற நேரத்தில் ,அமைதியாக வெளிவந்து அருவி எல்லோருடைய மனதிலும் ஓட ஆரம்பித்தது. ,சமூகத்தின் மிக முக்கிய பிரச்சனையை மிக அழகாக இயக்குனர் கையாண்டிருந்தார்.

நம் சமூகத்தை பொறுத்தமட்டில் சில விடயங்களை வெளிப்படையாக பேசுவதில் பலருக்கு தயக்கம் இருக்கிறது. இது பல சமூக பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை யாரும் சிந்திப்பதில்லை. இதைத்தான் தெளிவாக இயக்குனர் தெரிவு செய்த அருவி என்ற கதாபாத்திரம் மூலம் மக்களுக்கு சொல்லிருக்கின்றார். அருவி என்ற அருமையான படத்தை பலரும் பாராட்டிய நிலையில், இந்த திரைப்படத்துக்கு பல விருதுகளும் கிடைத்தன.

அப்படித்தான் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற எடிசன் விருது வழங்கும் நிகழ்வில் பல விருதுகளை அருவிப் படம் தட்டிச்சென்றது, அந்த நேரத்தில் அருவி இயக்குனர் அருண் பிரபு உட்பட கதாநாயகி அதிதி பாலன் மற்றும் படக்குழுவை சந்தித்தபோது எல்லோரும் மிக எளிமையான நண்பர்களாகே இருந்தார்கள்.அதே போலவே இந்த நல்லப்படத்துக்கு கல்லூரி நண்பர்களே ஒற்றுமையாக இருந்து உழைத்திருக்கின்றார்கள் என்ற உண்மையும் அறிந்துகொள்ளமுடிந்தது. இந்த திரைப்படத்தில் நடித்த கதாநாயகி அதிதி பாலன் உட்பட ஏனைய அறிமுக நடிகர்களின் நடிப்பும் நீண்ட கால அனுபவமுடைய நடிகர்களை போன்று மிகவும் சிறப்பாகவே இருந்தது எனலாம்.
அருவி குழுவின் அடுத்த பாய்ச்சலுக்கு பலரும் விழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button