செய்திகள்

அரைசொகுசு பஸ் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானம்..?

அரைசொகுசு பஸ் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பஸ் உரிமையாளர்களுக்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் பஸ் உரிமையாளர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

அரைசொகுசு சேவையினை கடுகதி சேவையாக மாற்றுமாறு இதன்போது பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரைசொகுசு பஸ் சேவை முன்னெடுக்கப்படுமாயின், அதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இருக்கைகளுக்கு ஏற்றவாறு மாத்திரமே பயணிகளை ஏற்ற வேண்டும்.

தலை வைக்ககூடிய வகையில் இருக்கைகள் அமைந்திருக்க வேண்டும் என்பதுடன், குறிப்பிட்ட பஸ் தரிப்பிடத்தில் மாத்திரம் பஸ்கள் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பஸ் உரிமையாளர்கள், தமது உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

இதனடிப்படையில் ஒரு வாரத்திற்குள் தீர்மானமொன்றை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பஸ் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download