செய்திகள்

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் ஆவணம் சமர்ப்பிப்பு.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான ஆவணத்தை சட்ட மாஅதிபர் சமர்பித்துள்ளார்.

21 ஆயிரம் பக்கங்களுக்கும் அதிக பக்கங்களை கொண்ட ஆவணம் அடங்கிய நாடுகடத்துவதற்கான கோரிக்கையை சட்ட மாஅதிபர் , வௌிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றிற்கு இன்று சமர்ப்பித்துள்ளார்.

நாடுகடத்தல் சட்டத்திற்கு அமைய, ஏதேனும் ஒரு நாட்டில் தங்கியுள்ள அல்லது வதிவிடமாக கொண்ட சந்தேகநபர் அல்லது குற்றவாளியை  நாட்டிற்கு அழைத்து வருவதற்கான கோரிக்கையை  சமர்பிப்பதற்கு முன்னர் , சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அதன் பின்னர் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சினூடாக நாடு கடத்துவதற்கான கோரிக்கையை வழங்க வேண்டும் என சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி , அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரால் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related Articles

Back to top button