செய்திகள்

அர்ஜுன ஹெட்டியாரச்சிக்கு பிணை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனமான சீ. கொன்சோடியம் லங்கா நிறுவனத்தின் தலைவரான அர்ஜுன ஹெட்டியாரச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கம் மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனம் அலட்சியமாக செயற்பட்டமை தொடர்பில் இனங்காணப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கப்பலின் கெப்டன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button