செய்திகள்

அர்ஜூன மகேந்திரனை விடவும் பெரிய அதிகாரியொருவரை விரைவில் கூண்டுக்குள் அடைக்கப்படுவார் – ஜனாதிபதி சூளுரை.

மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அர்ஜூன மகேந்திரனை விட பெரிய அதிகாரியொருவரை சிறையில் அடைப்பதற்கு தேவையாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த ஆவணங்களுக்கான சட்டரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது எனவும் ஜனாதிபதி இதன்போது சூளுரைத்தார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண சபை முறைமையும் மாகாண சபை தேர்தலும் முடக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான முழு பொறுப்பையும் பிரதமரே ஏற்கவேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஜனாதிபதி யார் என்பதை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் இதன்போது திட்டவட்டமாக அறிவித்தார். 

Related Articles

Back to top button
image download