நிகழ்வுகள்மலையகம்

அர்த்தமுள்ள தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் உதவுவோம்-உதவும் கரங்கள் அமைப்வு…

உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக “அர்த்தமுள்ள தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் உதவுவோம்”
என்ற தொனிப்பொருளில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் காவத்தை வெள்ளாந்துறை நாபுலுவ இலக்கம் 1, இலக்கம் 2 பகுதியை சேர்ந்த 40 குடும்பங்களிற்கு இன்று (09/11) உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சேவையில் உதவும் கரங்கள் அமைப்பினுடைய பொருளாளர் அதிபர் பிரபாகர் உட்பட உறுப்பினர்களான பிரியந்த, நவநீதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

உதவும் கரங்கள் அமைப்பு தொடர்ச்சியாக மலையக பிரதேசங்களில் வறுமை நிலையில் இருக்கும் பல குடும்பங்களை தேர்வு செய்து உதவி நல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button