உலகம்

அல்பேனியாவில் நிலஅதிர்விலி சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் நிறைவு!

அல்பேனியாவில் நிலஅதிர்விலி சிக்கியுள்ளவர்களை தேடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர்  எடி ரமா அறிவித்துள்ளார்.

அல்பேனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 6.4 றிக்டர் நிலஅதிர்வில் சிக்கி உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால் தேடுதல் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படுவதாக பிரதமர் ரமா அறிவித்துள்ளார்.

அனர்த்தத்தினால் தலைநகர் டிரானாவில் ஆயிரத்து 465 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
image download