சமூகம்

அளுத்கமை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து

காலி – கொழும்பு பிரதான வீதியில் அளுத்கமை – களுவோமோதர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வீதியில் பயணித்து கொண்டிருந்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெ்ற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியினை சாரதிக்கு கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ள நிலையில் குறித்த பெண்களுடன் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 40 மற்றும் 60 வயதுடைய அளுத்கமை – களுவோமோதர – சீலாநந்த பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button