செய்திகள்
அழகுசாதனங்களை பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அழகுசாதனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அழகுசாதனங்களை பதிவு செய்தலை கட்டாயமாக்குவதுடன், அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவானது அழகுசாதன வகைகளை பதிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதுடன், அழகுசாதன வகைகளின் தன்மையை பரிசோதிக்கும் எனவும் அந்த ஆணையம் அறிவித்துள்ளது.
அத்துடன் மனித தோலுக்கு ஒத்துக்கொள்ளும் அழகுசாதன வகைகளை மாத்திரம் பதிவுசெய்வதற்கு இந்தக் குழுவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.