மலையகம்

அழகை இழந்த செங்ளேயர் நீர் வீழ்ச்சி.. ?

ஹட்டன் தொடக்கம் தலவாக்கலை வரை பயணிப்பவர்களுக்கு தெரியும் அங்கு கண்களுக்கு தெரியும் அழகான இடங்கள்.ஊரைவிட்டு வெளி இடங்களுக்கு சென்று வந்தாலும் அந்த இடத்தில் இயல்பாகவே கண் இமைக்காமல் அந்த அழகை மீண்டும் ரசிக்க மறுப்பதில்லை .

அதே போல புதிதாக அந்த பகுதிக்குள் வருபர்கள் இங்கு ஒரு வீட்டை கட்டி குடிபுகுந்திடலாமோ என்று முணுமுணுக்கும் அளவுக்கு அத்தனை கோடி அழகான இயற்கை நிறைந்து கிடக்கின்றன .

குறிப்பாக பத்தனை நீர்வீழ்ச்சி, செங்ளேயர் நீர் வீழ்ச்சையும் அமையப்பெற்ற பகுதிகளை குறிப்பிடலாம் ,மேல் கொத்மலை பிரச்சனை பெரிதாக வந்ததே இந்த மலையகத்தின் இயற்கை அழிவடைந்து போகுமே என்பது தானே. இது இவ்வாறு இருக்க கடந்த வாரம் பத்தனை புல் நில பகுதியில் உள்ள பற்றை காட்டை யொட்டிய பகுதியில் தீ பரவல் தொடர்பான செய்தியை நாம் பார்த்திருப்போம் ,இந்த தீ பரவல் ஏற்பட் டமைக்கான காரணம் தொடர்பில் இன்னும் கண்டரிய படவில்லை காட்டு தீ என்றால் ஒரு பகுதி எரிந்து இருந்தால் நம்பலாம் எனினும் இங்கு ஆற்றுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமுமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளமையானது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுற்று புற சூழல் அதிகார சபை மற்றும், போலீஸ் இது தொடர்பில் எந்தளவு அக்கறை கொண்டுள்ளனர் என்பதும் இங்கு மிக பெரிய கேள்வியகவே உள்ளது .நேற்றைய தினம் வரை குறிப்பாக புனித பத்திரியாசிரியர் பாடசாலைக்கு எதிர் திசையிலும் ரயில்வே கடவைக்கு அருகாமையிலும் இந்த தீபரவல் ஏற்பட்டத்தை மலையகம்.lk நேரலை மூலம் காண்பித்தது. குறித்த தீ மக்கள் வசிக்கும் ஒரு சில கிலோ மீற்றர் வரை வியாபித்து இருந்ததை அறிந்த தலவாக்கலை போலீசார் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் . எனினும் பத்தனை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி தொடக்கம் செங்ளேயர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி வரை தலாவை புல்நிலம் என்று சிறப்பு பெயரால் அழைக்கப்படும் பச்சை கம்பளம் போன்ற அழகான புற் தரை எரிந்து இயல்பை இழந்து நிற்பது மனதுக்கு வேதனை அளிக்கின்றது.

Related Articles

18 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button