செய்திகள்
அவசரகால சட்டம் ரத்து வர்த்தமானி வெளியீடு
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையெழுத்திட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, கடந்த 6ஆம் திகதி முதல் அவசரகால சட்டம் நாட்டில் அமுலாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி நேற்று இரவு கைச்சாத்திட்டுள்ளார்.
கடந்த 13 நாட்களாக அமுலில் இருந்த அவசரகால சட்டத்தை ரத்துச்செய்யும் குறித்த வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 13 நாட்களாக அமுலில் இருந்த அவசரகால சட்டத்தை ரத்துச்செய்யும் குறித்த வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவசரகால சட்டம்