செய்திகள்விளையாட்டு

அவசரகால நிலை பிரகடனம் ; ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதில் சிக்கல்.?

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், டோக்கியோவில் அவசரகால நிலையை விதிக்க ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி அரங்கிற்குள் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. ​

ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகை புதிய தொற்று பரவலுக்குத் தூண்டுதலாக அமையுமென பொதுமக்களின் அச்சத்தின் மத்தியில் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

வௌிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப்போட்டிகளைப் பார்வையிட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றும் 10 ஆயிரம் பார்வையாளர்களுக்கான வசதிகள் மாத்திரமே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ​பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை அல்லது நாளை மறுநாள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.​ எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை இந்த அவசரகால நடவடிக்கைகள், நடைமுறையில் இருக்கும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 3 வாரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.​

Related Articles

Back to top button