செய்திகள்

அவசர உணவு உதவி தேவைப்படும் 3 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி

இலங்கையில் அவசர உணவு உதவி தேவைப்படும் 3 மில்லியன் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கவுள்ளதாக உலக உணவுத்திட்டம் அறிவித்துள்ளது.ற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக கடந்த திங்கட்கிழமை அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்தது.

நீண்டகாலமாக நல்லுறவைப்பேணவரும் நாடு என்ற ரீதியில் இலங்கை மக்களுக்கு உதவுவதுடன் மாத்திரமன்றி, இந்தப் பொருளாதார நெருக்கடி தொடரும்பட்சத்தில் இப்பிராந்தியம் பாரிய பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்பதாலும் இந்த உதவியை வழங்குவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய ஏற்கனவே இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் முகவரகத்திற்கு வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமான நாட்டிலுள்ள 3 மில்லியன் மக்களுக்கு அவசியமான போசணைமிக்க உணவுத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கான 22 மில்லியன் டொலர்களை உலக உணவுத்திட்டத்திற்கும், 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திசார் உதவியாக 23 மில்லியன் டொலர்களையும் அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கவுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவி குறித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே உலக உணவுத்திட்டம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button