செய்திகள்

அவிசாவளையில் கண்டுபிடிக்கப்பட்ட 22கிலோ எடையுள்ள இரத்தினக்கல்.

அவிசாவளை – தெஹியாகலவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 கிலோ எடையுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு அரியவகையான இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த அரிய இரத்தினக்கல்லில் நீர் குமிழி இருப்பதால் அதிக மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மாணிக்கம் ஒரு லட்சம் கரட் எடையுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த படிக இரத்தினத்தின் வணிக மதிப்பு தொடர்ந்து மதிப்பிடப்படுவதாக தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button