...
செய்திகள்

அவிசாவளையில் மனைவியின் தாக்குதலில் பரிதாபமாய் உயிரிழந்த கணவன்.

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவமொன்று அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் வருகைத் தந்த கணவர், நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மனைவி, கணவரை பொல்லால் தாக்கியுள்ளதை அடுத்து, கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, தனது 8 வயதான மகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்த மனைவி, அதிகாலை தனது மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தையை ஒப்படைத்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவத்தில் அவிசாவளை – தைகல – கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen