செய்திகள்மலையகம்

அவிசாவளை தத்துவ நாபாவல பிரதேசத்தில் தனியார் பஸ் ஓட்டுனரை தாக்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.?

அவிசாவளை தத்துவ நாபாவல பிரதேசத்தில் தனியார் பஸ் ஓட்டுனரை தாக்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவாதாவது கடந்த வாரம் தனியார் பஸ் வண்டி ஒன்று அவிசாவளை நகரில் இருந்து தைகல கிராமத்திற்கு பயணித்தபோது நாபாவல நகரில் வீதி ஓரத்தில் நின்று கொண்டு இருந்த இளைஞர்கள் மீது தண்ணீர் வீசு பட்ட நிலையில் குறித்த பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் சென்றதால் கோவம் அடைந்த இளைஞர்கள் இன்று காலை குறித்த பஸ் வண்டியை நிறுத்தி நாப்பாவல நகரில் ஓட்டுனரை தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை யில் பிரதேச மக்கள்,தனியார் பஸ் வண்டி உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து நாப்பாவல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர் .

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 7மணியில் ஆரம்பித்து பகல் 12 மணிவரை நீடித்ததை தொடர்ந்து அவிசாவளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்வதாக உறுதியளித்ததன் பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download