Breaking News

அவிசாவளை வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி ..

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை பிரதான வீதியில் வாதொல பிரதேசத்தில் பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் கடையில் இன்று மாலை (02/04) 05 மணியளவில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீர் என பாரிய சத்தத்துடன்வெடிபோன்று ஏற்பட்டதில்குறித்த கடையில் வேலை செய்துகொண்டிருந்த 51 வயதுடைய இரண்டு குழந்தையின் தந்தை சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மேலும் கடை உரிமையாளர்உட்பட மற்றுமொருவரும் படுகாயங்களுடன் அவிசாவளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மரணம் அடைந்தவர் அவிசாவெல்ல புவக்பிட்டிய பிரகதிப்புர பிரதேசத்தை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவர் ஆவார் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை அவிசாவளை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

யூகேஷ்

Related Articles

Back to top button