உலகம்

அவுஸ்திரேலியாவில் சிறையிலிருந்து தப்பிய நபர், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சரண்.

அவுஸ்திரேலியாவில் 1990களில் சிறையிலிருந்து தப்பிய ஆடவர், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சரணடைந்துள்ளதாக அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1992ஆம் ஆண்டு, ரம்பம், கம்பி வெட்டுக் கருவி ஆகியவற்றைக் கொண்டு, சிட்னி நகரின் வடக்குப் பகுதியில் இருந்த சிறையிலிருந்து அவர் தப்பியதாக நம்பப்படுகிறது. அப்போது அவருக்கு 35 வயது.

அவரைத் தேடிப் பிடிக்க முடியவில்லை என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில பெலிஸார் கூறினர்.

தடை செய்யப்பட்ட செடியை வளர்த்த 2 குற்றச்சாட்டுகளுக்காக அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக சிட்னி மோர்னிங் ஹெரல்ட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அந்த 64 வயது ஆடவர் சிட்னி நகரில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். அவர் வீடில்லாமல் திரிந்ததாக டெய்லி டெலிகிராப் செய்தி நிறுவனம் கூறியது.

சிறையிலிருந்து தப்பியதற்காக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen