செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறது இலங்கை அணி .

(ராகவ்)

இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளமையை அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் 2021 – 2022ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான தொடர்கள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கைக்கு எதிராக 5 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் அடுத்த ஆண்டு அவுஸ்ரேலிய விளையாடவுள்ளது.

இந்த தொடரின் முதலாவது போட்டி அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சிட்னியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com