...
விளையாட்டு

அவுஸ்திரேலிய ஆடவர் டெஸ்ட் அணி தலைவராக பேட் கம்மின்ஸ்

அவுஸ்திரேலியாவின் 47 ஆவது டெஸ்ட்  கிரிக்கெட் அணித் தலைவராக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது. 

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

5  போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் பிரிஸ்பேனில் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தலைவராக செயற்பட்டு வந்த டிம் பெய்ன், பெண் ஊழியர் ஒருவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளானதையடுத்து, அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து, அவுஸ்திரேலிய அணியின் 47 ஆவது டெஸ்ட் அணித்தலைவராக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் கம்மின்ஸ் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முழுநேர தலைவராக செயற்படும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுகிறார். 

இந்தத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Related Articles

Back to top button


Thubinail image
Screen