உலகம்

அவுஸ்திரேலிய தேசிய கீதத்தில் புதிய மாற்றமம்!

அவுஸ்திரேலிய பூா்வ குடிகளின் வரலாற்றைப் போற்றும் வகையில், அந்நாட்டு தேசிய கீதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனா். அந்த நாட்டை ஆங்கிலேயா்கள் 18-ஆம் நூற்றாண்டில் தங்கள் காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனார்.

அதன் பூர்வ குடிமக்கள் பின்தங்கிய சமூகமாக அங்கு இருந்து வருகின்றனா்.
அண்மைக்காலமாக, பூா்வ குடி வரலாற்றுக்கு அவுஸ்திரேலிய அரசு முக்கியத்துவமளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தேசிய கீதத்தில் ‘இளமையான சுதந்திர நாடு’ (Australians all let us rejoice, for we are young and free) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அது புத்தாண்டு தினம் முதல் ‘ஒன்றுபட்ட சுதந்திர நாடு’ (one and free) என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆங்கில காலனியாதிக்கத்திலிருந்து அவுஸ்திரேலியாவின் வரலாறு தொடங்குவதாக தேசிய கீதத்தில் அர்த்தம் கொடுத்து வந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com