உலகம்கல்வி

அவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்

அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலேயே இவ்வாறு தமிழ்மொழி பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

அவுஸ்ரேலியாவில் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இதனை கருத்திற் கொண்டு தமிழ் மொழியை, பாடசாலைகளில் பயிற்றுவிக்க நியூ சவுத்வேல்ஸ் மாகாணம் முடிவு செய்துள்ளது.

இதற்கான புதிய பாடத்திட்டத்தையும் மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

நியூ சவுத்வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் தமிழ் தவிர ஹிந்தி, பஞ்சாபி, பெர்சியன் மற்றும் மெசிடோனியா ஆகிய 5 மொழிகளும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதன்மூலம், நியூ சவுத்வேல்ஸ் மாகாண பாடசாலைகளில் இரண்டாம் மொழியாக பயிற்றுவிக்கப்படும் மொழிகளின் எண்ணிக்கை 69 ஆக அதிகரிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button