அவுஸ்.கெதிரான டெஸ்ட் தொடரை 2-1 கணக்கில் வென்றது இந்தியா.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி தமது முதல் இனிங்சுக்காக லபுசென் பெற்ற 108 ஓட்டங்களுடன் 369 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன், தாகூர் மற்றும் வெசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனை அடுத்து இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 294 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதற்கமைய 328 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இனிங்சில் பதிலளித்த இந்தியா 6 விக்கெட் இழப்பக்கு 329 ஓட்டங்களை பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றது.
இரண்டாவது இனிங்சில் கில் 91 ஓட்டங்களையும், பண்ட் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வித்திட்டனர்.
அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.