செய்திகள்

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கான செய்தி.!

கொவிஷீல்ட் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஃபைசர் அல்லது மொடர்னா கொவிட் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சி அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொற்று நோய் தொடர்பான விசேட நிபுணர் குழுவினால் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் பிரகாரம், 26 ஆயிரம் ஃபைசர் தடுப்பூசிகளும் மற்றும் ஒரு மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் எதிர்வரும் வாரம் நாட்டிற்கு கிடைக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button