செய்திகள்

அஸ்வின் குடும்பத்தில் பத்து பேருக்கு கொரோனா.

(மாதுருபாகன் ராகவ்)

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில்
பத்து பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி பிரீத்தியின் உத்தியோகபூர்வ
டுவிட்டர் கணக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் அஸ்வின் குடும்பத்தில் ஆறு பெரியவர்களுக்கும் நான்கு
சிறுவர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தொற்றுடன் அடையாளங் காணப்பட்ட அனைவரும் தனிமையில் இருப்பதுடன் ,
தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

தொற்றுக்கு எதிராக தன்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில்
அவர்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக அஸ்வின் அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button