செய்திகள்

அஹ்னாப் ஜசீமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : சர்வதேச மன்னிப்புச்சபை

நவரசம் என்ற கவிதைத் தொகுப்பு நூலை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞருக்கு எதிரான ஆதாரங்கள் எவையும் இல்லாதவிடத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், அஹ்னாப் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சர்வதே மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் யாமினி மிஷ்ரா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகத் பாலசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

‘நவரசம்’ சஞ்சிகையில் தீவிரவாத கருத்துக்கள் அடங்கியிருப்பதாக கூறி 26 வயதுடைய கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் கடந்த 2020 மே மாதம் 16 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button