செய்திகள்

ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து லஞ்சீட்டுக்கு தடை

உணவு பொதியிடலுக்காகப் பயன்படுத்தப் படும் உக்காத லஞ்சீட்டுகளுக்குத் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் அனைத்துக் கடைகளிலும் உக்கும் Biodegradable லஞ்சீட்களை மாத்திரமே விற்க முடியும். இது போன்ற உக்கும் பொலித்தீன்களை உணவு பொதியிடலுக்காக பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button