மலையகம்

ஆக்கரத்தன்ன தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு  

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பசறை – ஆக்கரத்தன்ன தோட்டத் தொழிலாளர்கள், இன்று (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.  இதன்போது, சுமார் 1,000 பேர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

தொழிலாளர்கள் கொய்த தேயிலைக் கொழுந்துகள், தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்ட இறப்பர் பால் என்பவற்றை ஏந்தியவாறு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் இருவரை கைது செய்தமையை ஆட்சேபித்தும், தோட்டக் காணியை வெளியாருக்கு வழங்குவதை எதிர்த்தும், இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button