செய்திகள்

ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றிச் செல்வோரை கைது செய்ய நடவடிக்கை!

ஆசன எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைதுசெய்யுமாறு காவல்துறை மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இன்று முதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிகளவில் பயணிகளை ஏற்றும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைதுசெய்யுமாறும், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button