...
செய்திகள்மலையகம்

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் கல்விக்கான ஒதுக்கீட்டை உறுதி செய்யக்கோரி பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அஹஸ்வெவ பகுதியில் ஆர்ப்பாட்டம்.

ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் கல்விக்கான ஆறுவீத ஒதுக்கீட்டை உறுதி செய்யக்கோரி பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

தொடர் பிரச்சினையாக காணப்படக்கூடிய ஆசிரியர்கள் சம்பள பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர கூறியும்வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 6% கல்விக்கான ஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரியும் அஹஸ்வெவ முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் பகல கொரகோய அல் அறபா முஸ்லிம் வித்தியாலய பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தம் பாடசாலைக்கு முன்னே அமைதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பெற்றோர்கள் கடந்தகாலங்களில் இக்கட்டான சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை உறுதி செய்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன் தம்முடைய வாழ்வாதார செலவுகளை அடிப்படையாகக்கொண்ட சம்பள பிரச்சனைகளுக்கும் மற்றும் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாணவர்கள் முகம் கொடுக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை அரசாங்கம் பெற்று தரப்படும் கோரினார்கள்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen