உலகம்

ஆசிபாவுக்கு நீதி கேட்டு போராட்டம்

8 வயது இந்திய சிறுமியான ஆசிபா, வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதனையடுத்து, சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘ஜஸ்டிஸ் போ ஆசிஃபா’ என்று ஹேஸ் டெக்கின் ஊடாக சமூக வலைத்தளமான டுவிட்டரில் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆசிபாவுக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவின், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் வசித்துவந்த சிறுமியான ஆசிபா, கடந்த ஜனவரி மாதம் மாயமானார்.

பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சிறுமி 8 பேர் கொண்ட குழுவினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார்.

திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா, கடந்த பெப்ரவரி மாதம் சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தியுள்ளது.

அத்துடன், இந்த வழக்கில் கைதானவரை விடுவிக்க வேண்டும் என அம்மாநில பா.ஜ.க உறுப்பினர்கள் இருவர் தற்போது போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து, சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என என்ற ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button