விளையாட்டு

ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக சிங்கத்துக்கு வெண்கலப்பதக்கம்.

53ஆவது ஆசிய ஆணழகன் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் மலையக இளைஞன் எஸ்.ராஜகுமாரன் 60 கிலோ எடைப்பிரிவில் வெங்கல பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

இந்த தொடரில் 30 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இந்த வெற்றிக்கு அமைவாக டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு ராஜகுமாரனுக்கு கிட்டியுள்ளது.

இந்த 23 வயதுக்குட்பட்ட ஜூனியர் சம்பியன்ஷிப் தொடரில் சாதிக்க வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என ராஜகுமாரன் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download