மலையகம்

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் ?

 

வலைப்­பந்­தாட்ட பயிற்­சிக்கு வர மறுத்த மாண­வியின் கன்­னத்தில் ஆசி­ரியர் பல­மாக அறைந்­ததால் காதில் இரத்தம் வந்த நிலையில் குறித்த மாணவி கம்­பளை வைத்­திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

கொத்­மலை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாட­சா­லை­யொன்­றி­லேயே நேற்­று­முன்­தினம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக மாண­வியின் பெற்றோர் புஸல்­லாவ பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

சம்­பவ தினம் தரம் பத்தில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி பாட­சா­லை­யை­விட்டு வெளி­யே­றிய வேளை­யில்­ வ­லைப்­பந்­தாட்ட பயிற்­று­ விப்­பா­ள­ரான ஆசி­ரியர் குறித்த மாண­வியை பயிற்­சிக்கு வரு­மாறு அழைத்­துள்ளார். இதன்போது மாணவி தனக்கு சுக­யீனம் கார­ண­மாக இன்று வர முடி­யாது என கூறிய சந்­தர்ப்­பத்­தி­லேயே மேற்­படி ஆசி­ரியர் மாண­வியின் கன்­னத்தில் பல­மாக அறைந்­த­தாக பொலிஸ் முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.இச்­சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை புஸல்­லாவ பொலிஸார் மேற்­கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியாளர் -ஷான் சதீஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com