செய்திகள்

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது.!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகி, முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை 3வது நாளாக இன்றும் (14) தொடர்கின்றது.

நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் நேற்று முன்தினம் (12) காலை இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு இதுவரையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு கடந்த 08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்படட நிலையில், இவர்களில் தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தியமை அரச அடக்குமுறையின் உச்சக்கட்டமாகவே கருத முடியும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button