செய்திகள்

ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்

பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் இரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதற்கான நிதியை, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி, ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சிடம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குமாறு துறைசார் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com