செய்திகள்

ஆசிரியர்களுக்கு டெப், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொற்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பெரும் தியாகத்தை செய்து வருவதாகவும், மாணவர்களின் சிரமங்களை மட்டுமல்லாது, ஆசிரியர்களின் சிரமங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button