ஆசிரியர் திரு .கே .ஜீவராஜன் மாணவர் ஒன்றியம் அடையாளம் கண்டுகொண்ட மற்றுமொரு மலையக ஆசிரியர்!
ஜீவராஜன் ஆசிரியர் அந்த பெயரை சொன்னால் மலையகத்தில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அப்படி மலையக மக்கள் மனதில் வாழ்த்துக்கொண்டிருக்கும் ஒரு மா மனிதர்.மலையக கல்வி வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி பல மலையக பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை அவரையே சாரும் .அவர் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும் அவருடைய உன்னதமான சேவை இன்றும் அவருடைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவது அவருடைய தீர்க்கதரிசன சேவை நோக்கத்தை குறித்து நிக்கின்றது.
ஹட்டனை இயங்கு தலமாக கொண்டு இயங்கும் ஆசிரியர் திரு .கே .ஜீவராஜன் மாணவர் ஒன்றியம் கடந்த 07 வருடங்களாக மலையகத்தில் கஷ்ட பிரதேசங்களில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் கணித பாட கற்றலை ஊக்குவிக்க இலவச வகுப்புக்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முதலில் ஒன்றியத்தில் உள்ள அங்கத்தவர்களே இதை இதுவரைகாலமும் நடத்தி வந்திருக்கின்றார்கள்.
தற்போழுது மலையகத்தில் தோட்டப்புற பாடசாலைகளில் கல்வி கற்று கொடுக்கின்ற மிக திறமையான ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் இந்த சேவை முன்னெடுத்து வரும் நிலையில் கடந்த 12.11.2017 அன்று பொகோவந்தலாவை டென்சின் பாடசாலையில் இந்த கணித கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதன் போது அப்பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்காகவே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஆசிரியர் திரு .உமாச்சந்திரன் மிக சிறப்பாக அன்றைய மாணவர்களுக்கு கணித பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கின்டார் முடியும் வரையும் மாணவர்கள் சளைக்காமல் ஆர்வமாக வகுப்பில் இருந்து கற்று இருக்கின்றார்கள் அந்த அளவுக்கு மாணவர்களுக்கு கணித பாடத்தை கற்பிக்க நுணுக்கம் கொண்ட ஆசிரியர் இவர் .கடந்த சாதாரண தரத்தில் தன்னுடைய பாடசாலையான பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை 100 வீத பெறுபேறுகளோடு அடுத்த கட்டத்துக்கு உருவாக்கி கொடுத்து இருக்கக்கூடிய உன்னத குருவாக தன்னை அடையாளப்படுத்தி விட்டார். உன்னதமான மனிதரான ஜீவராஜன் அவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்களால் இன்னும் ஒரு மகத்தான ஆசிரியர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.என்பது மகழ்ச்சியே தொடரட்டும்,மலையகம் மாற்றம் பெறட்டும்.
இன்றைய பேஸ்புக் பதிவு
ஆர் .ஜே .தனா