செய்திகள்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறிய மூவாயிரத்து 772 பேரை சேவைக்கு இணைந்துக் கொள்ளும் செயற்பாடு ஆரம்பம்..

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறிய மூவாயிரத்து 772 பேரை சேவைக்கு இணைந்துக் கொள்ளும் செயற்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்பவர்களுக்கான நியமனம் கடிதங்களை அவர்களின் வீடுகளுக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ் சுபோதிகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

புதிய நியமனங்கள் வழங்கப்படும் ஆசிரியர்களில் ஆயிரம் பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அனைவரும் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com