செய்திகள்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் விசேட வர்த்தமாணி

தமிழ் மொழி மூல தேசிய பாசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (07.06.2018) காலை கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.யூ.ஹேமன்த பிரேமதிலக கல்வி அமைச்சின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிப்பாளர் எஸ்.முரளிதரன்,கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிப்பாளர் இசட்.தாஜுடீன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

அண்மையில் மேல்மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலை அதிபர் களுடனான கலந்துரையாடல் ஒன்று எனது தலைமையில் இடம்பெற்றது.இதன்போது அதிபர் கள் பாடசாலையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர் .குறிப்பாக ஆசிரியர்கள் குறைபாடு தொட்பாகவே அதிகமாக கலந்துரையாடப்பட்டது.இதன் ஒரு கட்டமாகவே நான் மேற்குறிப்பிட்ட வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானித்தேன்.

இந்த வர்த்தமாணி அறிவித்தல் மூலமாக தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன். ஒரு சில தமிழ் மொழி பாடசாலைகளில் பெரும்பான்மை மொழி பேசுகின்றவர்களை வகுப்பாசிரியர்களாக நியமித்திருக்கின்றார்கள் .; இதன் காரணமாக பெற்றோர்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.எனவே இந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
மேலும் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் குறைபாடுகள் தொடர்பாக சரியான தகவல்கள் இல்லை.

பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர்களின் விபரங்களை கோருகின்ற பொழுது அதிபர்கள் மாகாண பாடசாலைகளில் இருந்து இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் பெரும்பான்மை மொழி பேசுகின்ற ஆசிரியர்கள் ஆகிய தகவல்களையும் சேர்த்து வழங்குகின்றார்கள்.இதன் காரணமாக உண்மையான ஆசிரியர் பற்றாக்குறை தெரிவதில்லை.இதனை நிவர்த்தி செய்யும் முகமாக தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்களை அமைச்சிற்கு அழைத்து எதிர்வரும் 21.06.2018 அன்று கலந்துரையாடல் ஒன்றை நடாத்த எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடலின் பொழுது பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடி தகவல்களை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நிலவுகின்ற குறைபாடுகளுக்கு அமைவாக வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதன் மூலம் முழுமையாக குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button