கல்விசெய்திகள்நுவரெலியாமலையகம்

ஆசிரிய உதவியாளர்களுக்கான விசேட சேவை எதிர்வரும் தினங்களில்..

ஆசிரிய உதவியாளர்களை தரம் 3-1 க்கு உள்வாங்குவதில் உள்ள இடர்களை இனங்கண்டதன் அடிப்படையில் வலய கல்வி பணிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, அவர்களுடன் கலந்துரையாடி ஆசிரிய உதவியாளர்களின் சேவையை நிரந்தரமாக்குவதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் அமரசிரி பியதாஸ அவர்கள் மிக துரிதமாக செயற்பட்டுள்ளார்.

ஆசிரியர்கள் கவனக்குறைவும் இந்நியமனம் காலதாமதமாகுவதற்கு பிரதானமான காரணமாகும். 82 ஆசிரியர்கள் இன்னமும் எவ்வித விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்துக்கொடுக்கவில்லை.

குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றை உடனடியாக ஈடுசெய்வதில்லை என கல்வி பணிப்பாளர் குறிப்பிட்டார்.

மேலும் 76 பேர்களுக்கு இப்போது தான் பரீட்சை திணைக்களத்திலிருந்து பெறுபேறுகள் உறுதிபடுத்தப்பட்டு வந்துள்ளது. எனவே மிகவிரைவாக கோப்புகள் பூரணப்படுத்தப்படும் என மேலும் தெரிவித்தார்.

எனவே அன்பான ஆசிரிய தோழர்களே இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

பின்வரும் திகதிகளில் கீழ் காணும் சேவை இடம்பெறும்

2019.09.11 ஆந் திகதி புதன் கிழமை சேவை நேரத்தில் கல்வி காரியாலயம் வந்து உங்களின் கோப்புகளில் காணப்படும் குறை பாடுகளை கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.

2019.09.13 ஆந் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் கோட்டம் 2,3 ல் உள்ள ஆசிரியர்கள் வருகை தந்து உங்கள் கோப்புகளை சீர்படுத்திக்கொள்ளுங்கள்

2019.09.16 ஆந் திகதி திங்கட் கிழமை காலை 8.30 மணி தொடக்கம் கோட்டம் 01 ல் உள்ள ஆசிரியர்கள் வருகை தந்து உங்கள் கோப்புகளை சீர்படுத்திக்கொள்ளுங்கள்

தயவுசெய்து நுவரெலியா வலயத்திலுள்ள ஆசிரிய உதவியாளர்கள் அனைவருக்கும் இத்தகவலை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

சம்பத்தப்பட்ட அதிபர்களும், கோட்டக்கல்வி பணிப்பாளர்களும் இது தொடர்பில் தங்களது மேலான ஒத்துழைப்புகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்

தகவல் : சி.இரவிந்திரன்
பொதுச்செயலாளர்
மலையக ஆசிரியர் முன்னணி

“இணைவோம்,கல்வியால் சமூகத்தைக் கடைத்தேற்றுவோம்”

Related Articles

Back to top button
image download