கல்விமலையகம்

ஆசிரிய உதவியாளர்கள் பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சருக்கு கடிதம்

மலையகத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

மேலும் அக்கடிதத்தில் நியமனம் பெற்று மூன்றரை வருடங்கள் பூர்த்தியாக இருக்கும் இவர்களின் நியமனமானது இன்னும் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க படவில்லை வர்த்தமானி அறிவித்தலின் படி ஐந்து வருடத்திற்குள் பட்டதாரி அல்லது டிப்ளோமா முடிக்காவிட்டால் நியமனம் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனேகமான ஆசிரியர் உதவியாளர்கள் ஆசிரியர் கலாசாலையில் இரண்டு வருட பயிற்சியை பூரணப்படுத்தி மீண்டும் பாடசாலையில் சேவையை தொடர்கின்றார்கள்.

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு போதுமானது அல்ல. கடந்த காலங்களில் தாங்களை நிரந்தரமாக கோரி பல போராட்டங்களை மேற்கொண்ட போதும் அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் வரவில்லை.

எனினும் தற்போது சாதாரண தரத்தில் சித்தி பெற்றவர்களை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவையின் அனுமதியினை பெற்று உள்ளனர் அவர்களுக்கு ஆசிரியருக்கு நிகரான சம்பளம் வழங்கப்பட இருக்கிறது.

ஆனால் உயர் தரத்தில் சித்தி பெற்று ஆசிரியர் பயிற்சியும் பூர்த்திசெய்து வெறும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனவே மீண்டும் மீண்டும் ஆசிரிய உதவியாளர்களை ஏமாற்றாமல் உடனடியாக ஆசிரியர் தரத்திற்கு உள்ளிழுக்கப்பட்டு அவர்களுக்கான நிறுவ சம்பளத்தையும் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

 

செய்தி : சுந்தரலிங்கம் பிரதீப்

Related Articles

37 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button